Posts

பராசக்தியின் கண்கள்

  அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார் . அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை . அவன் யார் , எங்கிருந்து வருகிறான் , எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது . ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை . அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது . " வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான் ....". அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது . வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது . அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது . காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது . உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது செந்திலின் திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது . ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான் . அதை வாங்குவத

புத்திரபாக்கியம்

  !! திருமண பரிகாரம் *!! திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம் . இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது . எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் , குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார் . இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும் . ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும் . கணவணும் , மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு . இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார் . சித்ததான சித்துகளுக் குறுதியான சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண வத்தாத பாக்கியசந் தான பாக்கியம் வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே . - அகத்தியர் - க